மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் (Maviddapuram Kandaswamy Kovil - Maviddapuram, Jaffna)
மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் இலங்கையின் வடபகுதியில் மாவிட்டபுரத்தில் அமைந்துள்ள ஒரு பழமை வாய்ந்த முருகன் கோவில் ஆகும். இலங்கையில் காணப்படும் சைவ சமய திருத்தலங்களில் மிகவும் பழமையும் தொன்மையும் வாய்ந்த தலமாக மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் காணப்படுகிறது.